TNSTC Driver/Conductor hall ticket எப்படி பதிவிறக்குவது? முழு வழிகாட்டி!
TNSTC Driver/Conductor தேர்வு ஜூலை 27 – ஹால் டிக்கெட் எப்படி பதிவிறக்குவது? முழு வழிகாட்டி!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) நடத்தும் Driver மற்றும் Conductor கான தேர்வு என்பது தமிழ்நாட்டில் பெருந்தொகையான நபர்களால் எதிர்பார்க்கப்படும் முக்கியமான அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான TNSTC Driver/Conductor தேர்வு ஜூலை 27, 2025 அன்று நடைபெற உள்ளது. தேர்வுக்கு எதிர்பார்த்தபடி ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு தேதி
ஜூலை 27, 2025 (ஞாயிற்றுக்கிழமை)
![]() |
TNSTC DRIVER HALL TICKET 2025 |
இந்த தேதியில், தமிழ்நாடு முழுவதும் ஆயிரக் கணக்கான தேர்வர்கள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
JOB DETAILS / வேலை விபரங்கள்
Conducting Body: | TNSTC |
Job Type: |
மாநில அரசு வேலை |
Job Location: |
TAMILNADU |
Post Name: | Driver/ Conductor |
Vacancy: |
3274 |
Hall ticket Release Date:
|
21/07/2025 |
Exam Date:
|
27/07/2025 |
Exam Mode: |
Offline |
ஹால் டிக்கெட் (Hall Ticket) வெளியீடு
TNSTC ஆனது, ஜூலை 21, 2025 முதல் தேர்விற்கான Driver/Conductor ஹால் டிக்கெட்டுகளை தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிற விபரங்களைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கும் வழிமுறை
TNPSC இணையதள முகவரிக்கு செல்லவும்: https://arasubus.tn.gov.in/
- முகப்புப்பக்கத்தில் "Latest News" என்பதில் Admit card/Hall ticket என்பதை தேர்வு செய்யவும்.
- அது உங்களை https://onlinereg.in/arasubus/ என்னும் website க்கு அழைத்துச்செல்லும் .
![]() |
TNSTC DRIVER HALL TICKET 2025 DOWNLOAD |
- அதில் "தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம்" என்பதை CLICK செய்யவும்.
![]() |
TNSTC DRIVER HALL TICKET 2025 DOWNLOAD |
- உங்களுடைய APPLICATION NO. மற்றும் DATE OF BIRTH ஐ பதிவிடவும்.
- பின் Captcha வை type செய்து Login செய்யவும்.
TNSTC DRIVER HALL TICKET 2025 DOWNLOAD |
- Dashboard என்பதற்கு இடதுபுறத்தில் " HALLTICKET PRINT" என்பதை கிளிக் செய்யவும்.
- ஹால் டிக்கெட் உங்கள் கணினி/மொபைலில் திரையில் தோன்றும்.
- அதை PDF ஆக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
ஹால் டிக்கெட்டில் உள்ள முக்கிய தகவல்கள்
![]() |
TNSTC DRIVER HALL TICKET 2025 DOWNLOAD |
- தேர்வரின் பெயர்
- பதிவு எண்
- புகைப்படம் மற்றும் கையொப்பம்
- தேர்வு தேதி மற்றும் நேரம்
- தேர்வு மையம் (முகவரி உட்பட)
முக்கிய அறிவுறுத்தல்கள்:
- ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.
- அதில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் கையொப்பம் தெளிவாக இருக்க வேண்டும்.
- ஹால் டிக்கெட்டுடன் அடையாள ஆவணமும் கொண்டு செல்ல வேண்டும் (ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்றவை).
- ஹால் டிக்கெட்டில் தவறான தகவல்கள் இருந்தால் உடனடியாக TNSTC ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.
தேர்வு முறைகள்
இந்த தேர்வு 3 நிலைகளில் நடைபெறும்.
➤Written Test:
|
➤Driving Test:
இந்தத் தேர்வு Road Transport Institute (IRT) தேர்வு மையங்களில் நடத்தப்படும்.
இதன் மூலம் கீழ்க்கண்ட செயல்முறை திறன்கள் பரிசோதிக்கப்படும்:
🔹 வாகனத்தை நன்கு இயக்கும் திறன்
🔹 கியர் மாற்றம், பஸ்ஸை சீராக ஓட்டும் திறன்
🔹 மேட்டுக்கு ஏறுதல், பின்வாங்குதல் (Reverse), நிறுத்துதல் (Parking)
🔹 சரியாக பிரேக் செய்யும் திறன்
🔹 டிக்கெட் வழங்குதல் மற்றும் பணம் கையாளும் திறன்
➤Interview:
- மதிப்பெண்கள்:20
- தொழில்முறை அறிவு, நடத்தை, துணிவான செயல்கள், மற்றும் தொழிலுக்கான விருப்பம் போன்றவை மதிப்பீடு செய்யப்படும்.
தேர்விற்கான தயாரிப்பு ஆலோசனைகள்:
- தினசரி படிப்பு திட்டம் அமைத்துக்கொண்டு படிக்கவும்
- தேர்வின் பாடத்திட்டம் மற்றும் கட்டமைப்பை முழுமையாக புரிந்துகொள்ளுங்கள்.
- தமிழ், பொது அறிவு மற்றும் கணிதத்தில் தினசரி பயிற்சி செய்யுங்கள்.
- வாகன இயந்திரங்கள் மற்றும் சாலை விதிகள் குறித்து அடிப்படை அறிவை மேம்படுத்துங்கள்.
- ஓட்டுதல் பயிற்சியை முறையாக செய்து, முக்கியமான ஓட்டுதல் திறன்களை பயிலுங்கள்.
- நேர்முகத் தேர்வுக்காக நம்பிக்கையுடன் பேசும் பழக்கம் மற்றும் உங்களை அறிமுகப்படுத்தும் பயிற்சி எடுக்கவும்.
தேர்வரின் கடைசி செயல்கள்
- ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அச்சுப்பதிப்புடன் வைத்துக்கொள்ளுங்கள்.
- தேர்வு மையத்தின் இடம் மற்றும் நேரத்தை ஒரு நாள் முன்பே சரிபார்க்கவும்.
- தேவையான ஆவணங்கள் – ஹால் டிக்கெட், அடையாள அட்டை (Aadhaar & License) ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
- புது பாடங்களை வாசிப்பதை தவிர்த்து, முன்பு படித்தவற்றை சுருக்கமாக மீண்டும் பார்வையிடுங்கள்.
- ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் நேர்மறையான எண்ணத்துடன் தேர்வுக்கு செல்லுங்கள்.
தேர்வுக்குப் பின் என்ன?
- Answer Key மற்றும் தேர்வு முடிவுகளை TNSTC இணையதளத்தில் சரிபார்க்கவும்.
- Driving Test-க்கு தயாராக, ஓட்டும் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளவும்.
- நேர்முகத் தேர்வுக்காக சுய அறிமுகம் மற்றும் தொழில்முறை அறிவில் நம்பிக்கையுடன் பேசும் பயிற்சி எடுக்கவும்.
உதவிக்கு :+91 04447749002
TNSTC Driver/Conductor தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து, தேர்விற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள். சரியான திட்டமிடலுடன், சீரான நேரமேற்பாட்டுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். உங்கள் கனவு அரசு வேலையைப் பெற வாழ்த்துக்கள்!
Important Links
அதிகாரப்பூர்வ வலைத்தளம் : CLICK HERE
HALL TICKET DOWNLOAD : CLICK HERE
TNSTC Driver/Conductor தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
இது போன்ற அரசு வேலைவாய்ப்பு தகவல்களை தவறவிடாமல் பெற, எங்கள் தளத்தை நாள்தோறும் பார்வையிடுங்கள்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...