Breaking News

IB ACIO RECRUITMENT 2025- NOTIFICATION OUT ! 3717 VACANCY! APPLY SOON!

IB ACIO 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – மத்திய அரசில் பணியதிகாரி ஆகும் அரிய வாய்ப்பு!

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Intelligence Bureau (IB), 2025-ஆம் ஆண்டிற்கான Assistant Central Intelligence Officer (ACIO) Grade-II/Executive பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடம், மத்திய அரசின் மிக முக்கியமான உளவுத்துறைக் களங்களில் ஒன்றாகும். பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஆர்வமுள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு.

IB ACIO RECRUITMENT 2025
    
    இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுத் தொடர்பான பணிகளில் முக்கிய பொறுப்புகளை வகிக்கவுள்ளனர். தகுதி, வயது வரம்பு, ஊதியம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பம் செய்வது எப்படி என்பவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.

பதவி:

  • Assistant Central Intelligence Officer Grade - II
  • Executive in IB
வகை : General Central Services, Group "C" (Non-Gazetted, Non-Ministerial)

முக்கிய தேதிகள்:


Conducting Body:

Ministry of Home affairs

Job Type:

மத்திய அரசு வேலை 

Vacancy:

3717

Notification Release Date:

14/07/2025

Application Start Date:

19/07/2025

Application Last Date:

10/08/2025

Date of Examination:

Announced Later

Application Mode:

Online



காலிப்பணியிடங்கள் :

  • மொத்த காலிப்பணியிடங்கள்: 3717

    • UR   : 1537
    • SC   :  556
    • ST    :  226
    • OBC :   946
    • SC    :  442

  • ஊதியம்: ₹44,900 – ₹1,42,400 (Level-7)
  • கூடுதலாக Special Security Allowance 20% வழங்கப்படும்.
  • DA, HRA, TA உள்ளிட்ட மற்ற நலத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்வு கட்டணம்:

➤ All candidates - ₹550/-
➤ Male candidates of UR, EWS, OBC- ₹650/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் வழி 

 கல்வித்தகுதி:

🔹 குறைந்தபட்சம் ஏதேனும் UG Degree (Any Bachelor's Degree)

🔹Knowledge of computer

வயது வரம்பு (10.08.2025 அடிப்படையில்)

🔹 குறைந்தபட்ச வயது - 18

🔹 அதிகபட்ச வயது - 27

இந்த பதவிகளுக்கு வயது தளர்வு உண்டு .

பிரிவு 
வயது தளர்வு

OBC

3 ஆண்டுகள்   

SC/ST

5 ஆண்டுகள்  


தேர்வு அமைப்பு:

IB ACIO தேர்வு 3 நிலைகளில் நடைபெறும்:

🔹TIER - 1: OBJECTIVE TYPE

  • கேள்விகள் – 100 
  • மதிப்பெண்கள் – 100 
  • நேரம் – 1 மணி நேரம்
  • நெகடிவ் மதிப்பெண்கள் - 1/4

    SUBJECTS:(5 parts containing 20 questions)

        a) Current Affairs
        b) General Studies
        c) Numerical Aptitude
        d) Reasoning and Logical Aptitude
        e) English

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்:
UR - 35, OBC -34, SC/ST - 33, EWS - 35

🔹TIER - 2: DESCRIPTIVE TYPE

  • கேள்விகள் – 4
  • மதிப்பெண்கள் – 50 
  • நேரம் – 1 மணி நேரம்

     SUBJECTS:

        Essay - 20 marks (2 questions)
        English Comprehension - 10 marks (1 question)
        Long answers - 20 marks (2 questions)

🔹TIER - 3: INTERVIEW

  • மதிப்பெண்கள் – 100 

ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில் https://www.mha.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

  2. IB ACIO 2025 Recruitment என்ற அறிவிப்பை தேர்ந்தெடுக்கவும்.
  3. “Apply Online” என்பதை கிளிக் செய்து, உங்கள் பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, தொடர்பு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சரியாக உள்ளிடவும்.
  4. உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை JPG/PNG வடிவத்தில் அப்ப்லோடு செய்யவும்.
  5. தேர்வுக்கான கட்டணத்தை உங்கள் விருப்பமான ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
  6. விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, ஒரு printout எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் பதிவுகள் அனைத்தும் சரியாக உள்ளதா என 2 முறை சரிபார்க்க வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

  • விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் நிராகரிக்கப்படலாம்.
  • தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் வெளியீடு அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.
  • நீங்கள் தகுதியுள்ளவராக இருந்தால் தயங்காமல் விண்ணப்பியுங்கள் – இது உங்கள் கனவுப் பணியிடம் ஆகலாம்!

Important Links

    IB ACIO 2025 வேலைவாய்ப்பு என்பது மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு ஆர்வத்துடன் தயாராகி விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசு வேலைக்கு முதன்மையான போட்டி தேர்வுகளில் இதுவும் ஒன்று. தேர்வில் வெற்றி பெற உங்கள் முயற்சியும், திட்டமிடலும் மிக அவசியம்.
    உங்கள் கனவு மத்திய அரசு வேலைக்கு இன்று முதல் தயாராகுங்கள்! தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...